கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
school-leave
கனமழை எச்சரிக்கை காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி நிலவுகிறது. 
Rain-report
இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நாளைக்குள் (நவ.12) நகர்ந்து வரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ. 11) முதல் நாளை மறுதினம் (நவ.13) வரை பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மேலும், இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகனமழை வரை பெய்யக்கூடும். இதனால் இந்த மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 15 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
Rain
இந்த நிலையில், மழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 
இந்த நிலையில் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் த.மோகன் அறிவித்துள்ளார். அதேபோல் கனமழை காரணமாக கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

From around the web