தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை!!
Fri, 22 Apr 2022

தமிழ்நாட்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) சனிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.