வளரும் தீண்டாமை: பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கு சீல்! வைரல் வீடியோ
Sep 17, 2022, 17:38 IST

சங்கரன்கோவில் அருகே பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் பட்டியலின மாணவர்கள் சென்றனர். அப்போது அந்த பெட்டிக்கடை உரிமையாளர் தின்பண்டம் வழங்கக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளது எனவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறி மாணவர்களை திருப்பி அனுப்பி உள்ளார்.

இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளரும் தீண்டாமை 😡😡😡#Tenkasi #sankarankovil pic.twitter.com/YAadFe6Dgm
— A1 (@Rukmang30340218) September 17, 2022
மேலும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர், பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.