நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!

 
CN-Ravi

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீர் மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை புதன்கிழமை (ஏப்ரல் 20) டெல்லி செல்ல உள்ளார்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் தொடர் வலியுறுத்தல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரிக்கை வலுத்துள்ள நிலையில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web