அனைத்து அலுவலர்களும் நாளை முதல் மாஸ்க் கட்டாயம் - அரசு உத்தரவு

 
Govt-office

அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 4-வது அலை ஜூன் 22-ம் தேதி தொடங்கும் என்று கான்பூரில் உள்ள ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்றால்போல இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

Masks-mandatory-in-Delhi-again-Rs-500-fine-for-violators

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 20,227 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, கோவையில் 55 உள்பட மொத்தம் 771 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலர்களும் நாளை முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

mask

இது தொடர்பாக பொதுத்துறை அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாலும், சில மாவட்டங்களில் நோய் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் நாளை (24-6-2022) முதல் கட்டாயமாக மாஸ்க் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும் சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web