மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 நாட்கள் பள்ளி விடுமுறை அறிவிப்பு

 
School-students

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், வகுப்புகள் செயல்படத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

school

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

School

தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web