அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அன்பில் மகேஷ் அதிரடி.. செம குஷியில் மாணவர்கள், பெற்றோர்கள்..!

 
Anbil-Mahesh

தமிழ்நாடுபள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக அக்கறையுடன் கூடிய மாணவர்களை உருவாக்கி வரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் அன்பாசிரியர் 2.0 என்ற விருது வழங்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2020-ம் ஆண்டில் முதல்முறையாக ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டது. அதற்கு பொதுமக்களிடம் ஏராளமான ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது.
 
இதையடுத்து, அன்பாசிரியர் 2.0 என்ற விருது பெறுவது குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, 'அன்பாசிரியர் 2021' விருதுக்கு விண்ணப்பிக்குமாறு தனியார் செய்தி நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த 532 ஆசிரியர்களும் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 425 பேர் முதல்கட்ட நேர்காணலுக்கும் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இறுதிச்சுற்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கான நேர்காணலின்போது, பாலின சமத்துவம், சமூகநீதி, பள்ளி மேம்பாட்டில் பங்கு, நூல் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து 10 கேள்விகள் ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் தேர்வுக் குழுவால் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக அன்பாசிரியர்கள் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் தேர்வுக் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர் 2021’ விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் குறிப்பிட்ட அந்த தனியார் நாளிதழ் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு ஆசிரியர்களுக்கு விருது வழங்கி, அன்பில் மகேஷ் கௌரவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் கட்டணத்தை செலுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பத்தை அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் காலநீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்பட்டு பிறகு முடிவு தெரிவிக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வு விண்ணபிக்க காலக்கெடுவை நீட்டிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

From around the web