நாளை முதல் புதுமைபெண் திட்டம்.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

 
college

‘புதுமைப்பெண்’ திட்டம் தொடக்க விழா நாளை சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது.

இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

MKS-Aravind

அரசுப் பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவியரின் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. உதவித்தொகை பெறும் மாணவிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் இந்தத்திட்டத்தின் தொடக்க விழா, நாளை (செப்., 5) வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

bharathi

உயர்கல்வி உறுதி திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 90 ஆயிரம் மாணவிகள் தேர்வாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

From around the web