இன்று முதல் பெண்களுக்கான இலவச பிங்க பேருந்து... இனி ஈசியா கண்டுபிடித்து விடலாம்!!

 
pink

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் நிறத்தில் வண்ணம் மாற்றப்பட்டு இன்று முதல் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயண திட்டத்திற்கான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார். இந்த திட்டத்தை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடனடியாக செயல்படுத்தினர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் அமோகவரவேற்பை பெற்றது. மாநகர பேருந்துகளில் விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் பயன் பெறும், பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு நகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன.

pink

ஆனால் தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்து அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெணகளுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் சில பேருந்துகளில் நடத்துனர், பெண்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், ‘பிங்க்’ நிறத்தில் வண்ணம் பூசி முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

Udhayanidhi-Stalin

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கான இலவச நகர பேருந்துக்கள் பிங்க் நிறமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

From around the web