பெண்களுக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி... பெறுவது எப்படி? விவரம் இதோ!

 
women

பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கத்தோடு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பெயர்: பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம் (New Swarnima Scheme For women)

இந்தத் திட்டத்தின் கீழ், உயர்ந்தபட்ச தொகையாக ரூ. 2 லட்சம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. அதுவும், ஆண்டொன்றுக்கு வெறும் 5 சதவிதம் வட்டி விகிதத்தில் தரப்படுகிறது.

Women

தகுதிகள்: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமான ரூ. 3 லட்சத்துக்குள் கீழ் இருக்க வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்:  இந்த கடன் திட்டத்தில், பயனாளிகள் பங்களிப்பு எதுவும் செலுத்த தேவையில்லை. ஒட்டு மொத்த கடன் தொகையும் வழங்கப்படுகிறது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகளின் குறைந்தது 5 முதல் 10 சதவிதம் வரை பங்களிப்பு செய்ய வேண்டும். ஆனால், இந்த திட்டத்தில் அத்தகைய நிபந்தனைகை ஏதும் இல்லை.

இந்த திட்டத்தின் கீழ், ரூ 2 லட்சம், வெறும் 5 சதவிதம் வட்டியில் வழங்கப்படுகிறது. இது, ஏனைய திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மிகவும் குறைவானதாகும். கடன் தொகையை, 3 முதல் 8 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது.

cash

தேவைப்படும் ஆவணங்கள்: சாதிச் சான்றிதழ் (ம) வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, சிறு  வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை மற்றும் இதர வங்கி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் , மண்டல மேலாளர் (அல்லது) அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்/ நகர கூட்டுறவு வங்கிகள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

From around the web