கரைபுரண்டு ஓடும் வெள்ளம்... மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
Karur

கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழை காரணமாக உடுமலை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிது. இதனால், கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், அணைப்பாளையம், செட்டிபாளையம், ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Karur

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையிலும் வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தற்போது அமராவதி ஆற்றில் 27 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் நீர்வளத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் போல் காட்சி அளிக்கும் அணையை சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்து வனம் போன்று காட்சியளிக்கிறது. இதனை சீரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Karur

இதேபோல் பழனி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக சண்முகா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அமராவதி மற்றும் சண்முகா நதி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

From around the web