விஷம் அருந்தி தந்தை, மகள் விபரீத முடிவு!! தாய் கவலைக்கிடம்.. கடன் பிரச்சனையால் தற்கொலையா ?

 
Courtallam

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டு வரும் நிலையில் தந்தை, மகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (55). இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு தனபிரியா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே தனியார் விடுதியில் கடந்த 30-ம் தேதி இரவு அறை எடுத்து தங்கி உள்ளார்.

Courtallam

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் விடுதி உரிமையாளர் கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது கணவர் மகாலிங்கம், மகள் தனப்பிரியா கட்டிலில் இறந்து கிடந்த நிலையில், மனைவி காமாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காமாட்சி மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தடவியியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இருவரின் உடலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Courtallam

முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மகாலிங்கம் மகனும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் திரண்டு வரும் நிலையில் தந்தை, மகள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web