பொங்கல் பண்டிகை எதிரொலி... தோவாளை மலர் சந்தையில் மிரளவைக்கும் பூக்கள் விலை!!

 
Thovalai

பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி, காவல் கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

Thovalai

சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

Thovalai

நேற்று கிலோ ரூ.1,700-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.800 உயர்ந்து கிலோ ரூ.2,500-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி பூ ரூ.1,250-ல் இருந்து ரூ.500 உயர்ந்து நேற்று கிலோ ரூ.1,500-க்கும், முல்லை ரூ.550-ல் இருந்து ரூ.650 உயர்ந்து கிலோ ரூ.1,200-க்கும் விற்பனையானது. அரளி கிலோ ரூ.320ல் இருந்து ரூ.450ஆகவும், ரோஜா ரூ.200ல் இருந்து 260ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

From around the web