இனி கவலை வேண்டாம்.. 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்... ஆவின் ‘டிலைட்’ பால் அறிமுகம்!

 
Aavin

மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் ‘டிலைட்’ என்ற பசும்பாலை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

Aavin

இந்த நிலையில் ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மழைக்காலம் என்றால் தண்ணீர் தேங்குவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில், இது போன்ற காலங்களில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Delite

முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பால் 500 மி.லி பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web