ரேஷன் கடைகளில் இந்த பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது!! அமைச்சர் எச்சரிக்கை

 
Ration-Shop

ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

Ration-card

இந்நிலையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருட்களையும் வாங்க ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, புதிய ரேஷன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

IPeriyasamy

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரேஷன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றார்.

From around the web