ரேஷன் குடும்ப அட்டை திருத்தம் செய்ய வேண்டுமா? இன்று குறைதீர் முகாம்!! மிஸ் பண்ணாதீங்க

 
Ration

ரேஷன் குடும்ப அட்டை மாற்றங்கள் மேற்கொள்ள சென்னையில் இன்று முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

ration-card

இந்த சூழலில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழ்நாடு அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Ration-card

ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும் ரேஷன் கடை குறித்து ஏதேனும் புகார் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவித்தால் விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web