காமராஜருக்கு முதல் முதலா சிலை வைத்தது யார் தெரியுமா?

 
Kamarajar

காமராஜர் சிலை என்றதும் மெரினா கடற்கரை சிலை மட்டும் உங்கள் நினைவிலிருந்தால் நீங்கள் இச்சிலையையம் வரலாற்றையும் அறியாதவர்.
நானும் சில வருடங்களுக்கு முன்பு வரை அறியாதவன் தான்.

திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் அண்ணன் கோவி லெனின் சென்னையில் நடத்திய ஒரு திராவிட வரலாற்றுப் பயணத்தில் தான் அறிந்துக்கொண்டேன்.
சென்னை மாநகராட்சியை முதன்முறையாக திமுக கைப்பற்றியதும் அதனுடைய முதல் தீர்மானமே தலைநகரில் கர்மவீரருக்கு சிலை வைப்பது தான்.

எதிர்க்கட்சியான திமுக தன்னுடைய முதல் வெற்றித் தீர்மானமாக நிறைவேற்றியது ஆளுங்கட்சித் தலைவர்களில் ஒருவருக்கானது.

அறிஞர் அண்ணா,  தலைவர் கலைஞர், கர்மவீரர் காமராசர் எல்லாம் கலந்துக்கொண்ட இவ்விழாவில் சிலையை திறந்து வைத்த சிறப்பு விருந்தினர்
அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு!

அண்ணா சாலையில் கிழக்கு நோக்கிப் பயணித்து தலைவர் கலைஞர் சிலையையும் தந்தைப் பெரியார் சிலையையும்
கடந்தால் இராணுவ வளாகத்தின் நுழைவுவாயில் நீங்கள் இச்சிலையைக் காணலாம்.

- A. சிவகுமார்

From around the web