டிசம்பர் 5-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
College-school

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

Tiruvarur

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குறிப்பாக இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வை காண நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

Local-holiday

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 5-ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

From around the web