நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 10) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி 10-12 தேதிகளில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

From around the web