கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8வது நாளில் உயிரிழப்பு... இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 
Coonoor

குன்னூர் அருகே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் 8 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி அனுசுயா. நிறைமாத கர்ப்பிணியான அனுசுயாவுக்கு கடந்த 10-ம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. 

dead-body

இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை செய்து 24 மணி நேரம் ஆகியும் அனுசியா மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுசியாவை அனுமதித்தார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த அனுசியா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சந்தேகம் மரணம் என்று கூறி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Police-arrested

அண்மையில் சென்னையில் கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுபோது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web