தந்தையின் கண்முன்னே ஆற்றில் மூழ்கிய மகள்கள்... காப்பாற்றப் போன நண்பன் உயிரிழப்பு!!

 
Chengalpatu

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (44). இவர் மூன்றாவது வாரம் ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நேற்று குடும்பத்துடன் சென்னையிலிருந்து மேல்மலையனூர் சென்றார். இவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

chengalpatu

அப்போது செங்கல்பட்டு நோக்கி வரும் போது மாமண்டூர் அருகேயுள்ள பாலாற்றை பார்த்துள்ளார். அங்கு ஆர்பரித்து செல்லும் தண்ணீரை பார்த்து உடன் வந்தவர்களுடன் குளிக்க சென்றார். அவருடன் சதீஷின் மகள்களான 6-ம் வகுப்பு படிக்கும் வேதஸ்ரீ (10) என்பவரும், 10-ம் வகுப்பு படிக்கும் சிவசங்கரி (15) என்பவரும் உடன் சென்று ஆற்றில் குளிக்க முதலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன் அவர்களை காப்பாற்ற சென்றபோது சீனுவாசனும் நீரில் மூழ்கினார். இதனால் உடன் வந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

dead

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரமாக போராடி வேதஸ்ரீ மற்றும் சிவசங்கரி ஆகியோரை பிணமாக மீட்டனர். இதனை தொடர்ந்து சீனிவாசனை தேடும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web