காதலனை மணக்க மகள் வீட்டைவிட்டு சென்ற மகள்.. மனமுடைந்த பெற்றோர் தற்கொலை.. தூத்துக்குடியில் அதிர்ச்சி!

 
Thoothukudi

தூத்துக்குடியில் மாற்று சமூகத்து வாலிபரை மகள் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி சங்கரம்மாள். இவரது மகளுக்கும் புதுப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து என்பவருக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

suicide

பின்னர் மகளின் காதல் விவகாரம் சின்னத்துரை - சங்கரம்மாள் தம்பதிக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப்பெண் காதலனை கரம்பிடிப்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், அப்பெண் காதலன் காளிமுத்துவை திருமணம் செய்வதற்காக, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் சங்கரம்மாள் வீட்டில் தூக்கிட்டும், தந்தை சின்னத்துரை அடைக்கலாபுரம் என்ற இடத்தில் விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டனர்.

dead-body

இந்த சம்பவம் காரணமாக கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தூத்துக்குடி ரூரல் டி எஸ் பி சம்பத், ஏ டிஎஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறையினர் கிராம மக்களுடன் உடலை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேறு சாதி இளைஞரை மகள் காதல் திருமணம் செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web