கவுன்சிலர் கணவர் செந்தில்தான் காரணம்... விசைத்தறி உரிமையாளர் தற்கொலை!!

 
lottery-suicide-in-erode

ஈரோட்டில் லாட்டரி மூலம் 62 லட்சத்தை இழந்த விசைத்தறி உரிமையாளர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விசைத்தறி உரிமையாளரான இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது நூல் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு தனது செல்போனில் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியுள்ளார். அதில், தான் 62 லட்சம் ரூபாயை லாட்டரியில் இழந்துள்ளதாகவும், அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பேசியுள்ளார்.

தனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39 வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்தான் காரணம் என்று தெரிவித்து இருந்தார். செந்திலிடம் ரூ. 30 லட்சத்தை நஷ்டயீடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என அவர் கூறினார்.

அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாயை இழந்து அமைச்சருக்கு கோரிக்கை வைத்தவுடன் தற்கொலை செய்து கொண்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web