சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா... மீண்டும் மாஸ்க் கட்டாயம்!

 
Masks-mandatory-in-Delhi-again-Rs-500-fine-for-violators

சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் சென்னையில் கடந்த இரு தினங்களாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அத்துடன் மர்மக்காய்ச்சல் இன்புளூயன்சாவும் பரவி வருகிறது. சளி, இருமல், வறட்டு இருமல் இவை மர்மகாய்ச்சலின் அறிகுறிகளாக மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால், முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

mask

இது குறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், வார இறுதி நாட்களில் தீவிர கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.மாநகராட்சியின் 16 சமுதாய நல மையங்களில், ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள், அருகில் உள்ள மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். வீட்டு தனிமையில் இருப்பவர்கள், கட்டாயம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டில் உள்ள பிற நபர்களும் முக கவசம் அணிதல் அவசியம். மாநகராட்சியில் 1.10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சில மாதங்களாக, தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது.

Mask

கடந்த சில தினங்களில், பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே, பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வரும் வேளையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பின் சுயசிகிச்சை மேற்கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web