தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

இன்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 34,64,131 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 497 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 566 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,56,746 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 567 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,20,931 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,174 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 22,757 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,57,88,717 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு ஏற்படவில்லை, இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.