பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் - இயக்குநர் பாக்யராஜ் பேச்சால் சர்ச்சை

 
Critics-of-Prime-Minister-Modi-are-born-prematurely

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குநர் பாக்யராஜ் கூறினார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா 2022 எனும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். அதனை இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது, “பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என  குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மோடியை போன்ற எனர்ஜியான பிரதமர் தான் இந்தியாவுக்கு தேவை.

பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை.” என்று கூறினார்.

From around the web