தொடர் கனமழை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!
Updated: Nov 2, 2022, 06:55 IST

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நவம்பர் 4-ம் தேதி வரை வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்