பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!! திருவள்ளூரில் பரபரப்பு

 
Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு சரளா (17) என்ற மகள் உள்ளார். இவர் திருவள்ளூவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

suicide

சரளா இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dead

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பள்ளி மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web