10-ம் வகுப்பு மறுகூட்டல் ரிசல்ட் இன்று வெளியீடு

 
students

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியாகியது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில், மதிப்பெண்களில் கூட்டல் பிழை இருப்பதாக கருதுவோருக்கு, மறுகூட்டல் செய்ய, அரசு தேர்வு துறை வாய்ப்பு அளித்துள்ளது.

exam

அதன்படி மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

govt-exam

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web