விரைவில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
MKS

சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு உடல்நலம், மனநலம் சார்ந்த விழிப்புணர்வு ஊர்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லால் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு மருத்துவக் குழுவினர் அடங்கிய 805 விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு மனநலம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு தரப்பட உள்ளது.

Flags

இந்த விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வரக்கூடாது. பல மாணவர்கள் காலை உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். காலையில் அதிகமாகவும் பிற்பகலில் நிதானமான அளவிலும் இரவில் குறைவாகவும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் பல மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரும் அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர் என்றார்.

மேலும், 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

mid-day-food

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வந்து விட்டால் படிப்பு தானாக வந்து விடும் என்றும் கல்விக்கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக மட்டுமே இருக்கக் கூடாது, மாணவர்களின் மதிப்பை உயர்த்தும் இடங்களாக கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

From around the web