வெளியானது செஸ் ஒலிம்பியாட் டீசர்

 
Teaser

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. 

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது. 

chess

இந்த நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசர் இன்று மாலை வெளியிட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

இதனிடையே சென்னை மாமல்லபுரத்தில் நடைபேறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா சென்னையில் நடைபெறுகிறது. இதில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மேலும் அவர் கூறுகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 


 

From around the web