தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 
Weather

தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

From around the web