அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தம் இல்லை - செல்லூர் ராஜூ

 
Sellur-Raju

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என முடிவாகி விட்டது என செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர அதிமுகவின் பகுதி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,

வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது ஆற்றில் 2 பேர் உயிரிழந்தது மோசமான சம்பவம். இந்த சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை தான் காரணம். இதற்கு அவர்களே முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.

பின்னர் சசிகலா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ,சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என முடிவாகி விட்டது. நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படியொரு கேள்வியை கேட்கிறீர்கள். நாட்டில் நடப்பவை குறித்து எதிர்க்கட்சிகளிடம் கேளுங்கள் என்றார்.

From around the web