பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!! பெற்றோர்கள் பதற்றம்

 
Velammal

திருவள்ளூர் மாவட்டம் பஞ்சட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்சட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் வித்யாலயா, வேலம்மாள் இன்டர்நேஷனல் என நான்கு பள்ளிகள் இயங்கி வருகிறது.

இந்த பள்ளிகளில் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி விடுதியில் தங்கியும், தினமும் வீட்டுக்கு சென்று வரும் மாணவர்களும் உள்ளனர். இன்று வழக்கம்போல் பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

bomb

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். மாணவர்களை வந்து அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், தனியார் மற்றும் பள்ளி வாகனங்களை உடனடியாக வரவழைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீசார் விரைந்து வந்துள்ளனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Velammal

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

From around the web