சாலையில் பைக் சாகசம்.. ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட்!! வாகன ஓட்டிகள் அவதி

 
chennai

சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் சாலையில் இருந்து ஜெமின் மேம்பாலம் நோக்கி கல்லூரி மாணவர்கள் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியவாறு ஒரே சக்கரத்தில் பைக்கை ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளனர். இதன் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

chennai

பொதுமக்களுக்கு இடையூறாக சாகசகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை, வாகன பதிவெண்களைக் கொண்டு பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.

ஆபத்தான முறையில் சாகசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.


ஏற்கனவே, பைக் ரேஸ் மற்றும் வீலிங் போன்ற சாகசங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web