சிறந்த திருநங்கை விருது: மர்லிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 
Best-Transgender-Award-for-AMarlima-from-Villupuram

2022-ம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கை ஒருவரை சிறப்பிக்கும் வகையில் 2022-ம் ஆண்டிற்கான, சிறந்த திருநங்கை விருதை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமாவுக்கு வழங்கினார்.

அவரது 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி, விருதுக்கான ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் த.ரத்னா, மாநில திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் நர்தகி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

From around the web