#BREAKING தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

 
Nasar
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார். அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கடந்த 3 நாட்களாக வீட்டுத்தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் நேற்று முதல் உடல் சோர்வுற்று இருந்ததாகவும் பின்னர் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் என அந்த முகநூல் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அடையாறு அரசு பங்களாவில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web