#BREAKING அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன், கடந்த 2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் காய்ச்சல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 10-ம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சை பிறகு அமைச்சர் துரைமுருகன் இல்லம் திரும்பி இருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் காய்ச்சல் காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.