ஆயுத பூஜை தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 
Bus stop

ஆயுதப் பூஜையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை, அக்டோபர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையின் மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Bus

இதனை முன்னிட்டு வரும் 30 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், இதர பேருந்துகளும் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

குறிப்பிட்ட இரு தினங்களில் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,050 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று பிற நகரங்களில் இருந்தும் 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

bus

சென்னையை பொருந்தவரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை தவிர்த்து, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் விடப்பட உள்ளன என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

From around the web