மாணவர்கள் கவனத்திற்கு...நாளை முதல் விடைதாள் பதிவிறக்கம்!

 
exam
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 12- ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியானது. 
12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, ‘‘12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள். எனவே விண்ணப்தாரர்கள் நாளை (14-ந்தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Notification பக்கத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
school
பதிவிறக்கம் செய்யப்பட்ட விடைத்தாள் நகலை மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரைக்குள் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டலுக்கு பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்கள் உயரும் பட்சத்தில் அவர்களின் விருப்ப படிப்பை படிக்க முடியும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web