இன்று முதல் செயலி மூலம் மட்டுமே வருகைப்பதிவு... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு 

 
Attendance
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
School
அதில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்கள் பள்ளியில் வழக்கமான வருகைப் பதிவேட்டில் தங்களது வருகையைப் பதிவு செய்யக்கூடாது. கல்வித்துறை செயலி மூலம் தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களின் வருகைப்பதிவையும் செயலி மூலம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, இன்று முதல் TNSED என்ற கல்வித்துறை செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
School-app
விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web