கலைஞரும் காமராஜரும்!

காமராஜ் என்ற பெயரை காமராஜர் என்றே இனி குறிப்பிடவேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தவர் கலைஞர்
காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்
சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு காமராஜர் சாலை என்று பெயர் வைத்தவர் கலைஞர்
சென்னை கிண்டியில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டியவர் கலைஞர்
காமராஜர் பிறந்த வீட்டை நினைவில்லம் ஆக்கியவர் கலைஞர்
காமராஜரின் உதவியாளராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தி, அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடும் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் ‘அன்னை சிவகாமி அம்மையார் வளாகம் என்று பெயர் சூட்டியவர் கலைஞர்
சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் திட்டம் கண்டவர் கலைஞர்
சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் விமான நிலையம் என்று பெயர் வைக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தந்தார்.
கன்னியாகுமரியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பியவர் கலைஞர்
நெருக்கடி நிலையின் போது காமராஜரை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சொன்னதற்கு, என் ஆட்சி கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, காமராஜரை கைது செய்ய முடியாது,என் ஆட்சியை கலைத்துவிட்டு உங்கள் ராணுவம் வேண்டுமானால் அதை செய்யட்டும் என்று சொன்னவர்
நாவலர் தலைமையில் நடைபெற்ற தன் மகன் ஸ்டாலின் திருமணத்திற்கு மணமேடைக்கே காரில் காமராஜரை அழைத்து வந்து சிறப்பு செய்தவர்
காமராஜர் மறைந்த அன்று கொட்டும் மழையில் இரவோடு இரவாக தன்னுடைய நேரடி மேற்பார்வையில் அவருடைய அடக்கத்திற்கான இடத்தை ஒதுக்கி தயார் செய்து தந்தவர் கலைஞர்
தொகுப்பு : A. சிவகுமார்