பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா... ரயில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

 
Pongal-Reservation
பொங்கல் பண்டிகைக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று (செப்.12) காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது.
வெகுதூரம் பயணிக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதாலும், சௌகரியமாக பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்களுக்கு அதிகப்பேர் முன்பதிவு செய்கின்றனர்.
Reservation
மேலும் பண்டிகை கால நாட்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பு தொடங்கப்படும். அவ்வாறு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும்.
அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. பொதுமக்கள் ஐஅர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலிலோ ரயில் டிக்கேட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பயணிக்க விரும்புபவா்கள் திங்கள்கிழமை (செப்., 12) முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.13 செவ்வாய்க்கிழமையும், ஜனவரி 12-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 14-ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 15-ம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Train
அதேபோன்று பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்பவா்கள் செப்.16-ம் தேதியும், பொங்கல் அன்று பயணிப்பவா்கள் செப்.17-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

From around the web