நாளை முதல் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு... மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
tasmac

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 17-ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது.

TASMAC

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

TASMAC

அதன்படி, மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் துவங்க உள்ளது. ஜனவரி 15-ம் தேதி துவங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதனால், இந்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இந்த பகுதிகளில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web