ஆடிப்பெருக்கு திருவிழா: இன்று 3 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!     

 
school

தமிழ்நட்டில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. கிராம பகுதிகளில் இதனை ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றன. நல்ல மழை பெய்து ஆறுகள் புது வெள்ளம் பெருகி ஒடி வரும். இந்த நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவார்கள்.

Aadiperuku

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இன்று செயல்படாது எனவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

Local-holiday

ஆடிப்பெருக்கிற்கு புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவர். காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 21 நாட்களாக ஆற்றில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web