ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை... இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல் தண்டவாளத்தில் முடிந்த சோகம்!!

 
Arani

ஆரணி அருகே இன்ஸ்ட்ரம்காமில் மலர்ந்த பள்ளி இளம் காதல் ஜோடி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டனர். ரயிலில் சிக்கி உடல்கள் அடையாளம் தெரியாத அளவில் சிதறி சின்னா பின்னமாகி இருந்ததால் உடல்களை காட்பாடி ரயில்வே போலீசார் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், ரயில்வே டிராக்கில் கிடந்த பள்ளிப் பையில் இருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து சிறுமியின் அடையாளத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

suicide

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகள் அபிநயா (17). இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தந்தையை இழந்த மாலதி தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆரணி அருகே களம்பூரை அடுத்த அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (19). இவர் போளூர் பகுதியில் உள்ள தனியார் ஐடிஐ பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளார்.

ஐடிஐ மாணவன் சக்திவேலுக்கும் மாணவி அபிநயாவுக்கும் இன்ஸ்டாகிராமில் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இருவரின் காதல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்த காதல் ஜோடி இருவரும் தற்கொலை செய்யும் விபரீத முடிவை எடுத்தனர்.

Katpadi Railway PS

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் இருவரும் ஒன்றாக இணைந்து ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள பால்வார்த்துவென்றான் கிராமம் அருகே விழுப்புரம் காட்பாடி ரயில்வே டிராக்கில் ஒன்றாக கைகோர்த்து நடந்து சென்றபோது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடி நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு சக்திவேல் மற்றும் மாலதி இருவரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இருவரின் உடல்களும் அடையாளம் தெரியாத வகையில் சிதறி கிடந்ததால் உடல்களை மீட்ட காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web