பெரம்பலூர் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி விபத்து!! இரண்டு பேர் உடல் நசுங்கி பலி!

 
Perambalur

பெரம்பலூர் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி உயிரந்தனர்.

சென்னை திருச்சி தேசியநெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் சின்னாறுவில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்து மோதிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உடல் சிக்கி இறந்தனர். பயணிகள் 12 பேர் காயமடைந்தனர்.

accident

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பிளக்ஸ் பேனர்களுக்கு பயண்படுத்தும் சதுர வடிவிலான ஸ்டீல் ராடுகளை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி கணரக லாரி ஒன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. சின்னாறு என்ற இடத்தில் வந்துகொண்டு இருந்தபோது லாரியை பின் தொடர்ந்து சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து லாரின் பின்னால் மோதி உள்ளது.

இந்த திடீர் சாலை விபத்தால், அரசு பேருந்து ஓட்டுநரும் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருவலப்பூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள ஐயப்பன்நாயக்கன்பேட்டை சேர்ந்த நடத்துநர் முருகன் என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகிவிட்டனர்.

Perambalur

தகவல் அறிந்த மங்கள்ம்பேட்டை போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி இடிபாடுகளிடையே சிக்கி இருந்த இருவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

From around the web