பைக் மோதியதில் தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. ப்ளஸ் 2 மாணவன் எரிந்து பலி!! ஒட்டன்சத்திரத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
dindigul

ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து மீது பைக் மோதி விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பாலத்தில் எதிர்நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பேருந்தின் முன்புறம் மோதினர். இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் கீழே விழுந்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது.

dindigul

இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்த ப்ளஸ் 2 மாணவர் பிரவீன் சம்பவ இடத்திலேயே எரிந்து உயிரிழந்தார். அவருடன் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பஸ் மீது மோதிய இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பேருந்துக்கும் பரவியதால் பேருந்தும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. முன்கூட்டியே பயணிகள், ஓட்டுநர், கண்டக்டர்கள் வேகமாக வெளியே வந்தனர். இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

dindigul

இருப்பினும் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த இடம் முழுவதும் கரும்புகையானத. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து நடந்த இடம் மேம்பாலம் என்பதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திது.

From around the web