நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இருவர்!!

 
Tirukovilur

திருகோவிலூர் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த எடையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவர் தனக்கு சொந்தமான காரை பழுது நீக்குவதற்காக திருக்கோவிலூருக்கு அனுப்பி வைத்தார். காரை அதே கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் (28) என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் அவரது நண்பர் பிரபு (32) என்பவர் வந்தார்.

திருக்கோவிலூர் வந்து காரை பழுது நீக்கம் செய்து கொண்டு மீண்டும் சொந்த ஊர் சென்றனர். அப்போது திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலையில் அய்யனார் கோவில் அருகில் காரில் முன்பக்கம் திடீரென புகை வந்துள்ளது.

இதனை கண்ட அதிர்ச்சியடைந்த சிவராஜ் உடன் காரை பிரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார். அதற்குள் கார் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பித்தனர். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web