நேருக்கு நேர் மோதிக் கொண்ட பைக்.. பதைபதைக்கும் வீடியோ

 
Bike

மயிலாடுதுறை அருகே இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்தபோது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரம் பிரதான சாலையில் வேகமாக எதிரெதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரும் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

accident

அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றை பின்தொடர்ந்து வந்த கார் ஓட்டுநர், விபத்தை கவனித்ததும் துரிதமாக செயல்பட்டு தனது வாகனத்தை சாலையின் ஒருபுறம் திருப்பி நிறுத்தியதால் அந்த கார் இரு சக்கர வாகனம் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web